November 11, 2007

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன

பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைப்பு : விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று இலங்கை விமானப்படை கமாண்டர் ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே கூறியுள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின், `டிவி' சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விரைவில் எங்கள் விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடத்தை கண்டுபிடித்து, அவரை தீர்த்துக் கட்டுவர். பிரபாகரனின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வவுனியாவில் மிகச்சிறிய பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது. எனவே, பிரபாகரன் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து, தாக்குதல் நடத்துவது எளிதாகி உள்ளது. அவரை கண்டுபிடிப்பது பெரிய சிரமமான காரியமாக தோன்றவில்லை. இம்முறை அவரை பிடித்து விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காகத்தான் இதுவரை நீண்ட பொறுமை காத்து வந்தோம். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. இவ்வாறு ரோஷன் குணதிலகே கூறினார். சமீபத்தில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைத்துள்ளது.

"கிரிவலம்" மகிமை : திருவாளர் சுகி.சிவம் II

தமிழக அரசின் சமீபத்திய தொழில்வளர்ச்சித்திட்டங்கள் : ஓர் ஆய்வு

பெரிய நிறுவனங்களின் வருகையால் வேலைவாய்ப்புக்கள் பெருகியுள்ளதா?

தமிழக அரசின் சமீபத்திய தொழில்வளர்ச்சி அறிவிப்புகள் - ஓர் ஆய்வு 3

மு.க.ஸ்டாலின் தாய்லாந்து விஜயம் : சர்ச்சை ஏன்? திமுக-வுக்குள் (குடும்பத்தில்) நடப்பது என்ன? தெளிவான விளக்கம்

மனுஷி - குறும்படம்

இன்றைய குறள்

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப்பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்

அறத்துப்பால் : பொறையுடைமை

வாழ்க வளமுடன்

"மனவளக்கலை சமுதாயத்தை வலிமையாக்கக் கூடிய, மதத்துக்கு அப்பாற்பட்ட, ஆண், பெண், சிறுவர், பெரியவர் அனைவரும் பழகக்கூடிய பொதுவான பயிற்சி. வாழ்க்கையில் மலிந்திருக்கும் கோபம், கவலை, வஞ்சம், பேராசை ஆகியவற்றின் தோற்றுவாயை அறிந்து, முழுவதுமாகச் சரிசெய்து கொள்ள எளிமையான வழிமுறைகள் மனவளக்கலைப் பயிற்சியில் கிடைக்கின்றனஅவரவர் எண்ணங்களே அவரவரது வாழ்க்கையைச் செதுக்குகின்றன. மனதைத் தூய்மையாக்கி வளப்படுத்தி வாழ்வோம் வாருங்கள். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்" - ஸ்ரீ சத்யசாய்

தமிழகத்தில் தமிழ்ச்செல்வன் வீரவணக்கக் கூட்டங்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

  • இலங்கை வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் சுப தமிழ்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க கூட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு காட்டத்துவங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒன்று தமிழ்நாட்டின் வேலூரில் ஞாயிற்றுகிழமை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த ஊரின் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல்துறை அதிகாரியிடமும் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அந்த கூட்டம் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஞானசேகர னின் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களும், அதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியினரின் சாலை மறியல் போராட்டங்களும் நிகழ்ந்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் பலர் கைதும் செய்யப் பட்டிருக்கின்றனர். இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பது குறித்தும், சுப தமிழ்செல்வன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி அஞ்சலி கவிதை எழுதியது பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
  • இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வைக் காணவேண்டும் - இந்திய நிதியமைச்சர் : பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் அல்லாது சமாதானப் பேச்சுக்களினூடான அரசியல் தீர்வொன்றினைக் காணவெண்டுமென இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் ஞாபகார்த்த உரையின் போது கருத்து வெளியிட்டுள்ள திரு. ப.சிதம்பரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சனைக்கு முன்னர் மத்தியஸ்தம் வகிக்கும்போது விடுதலைப்புலிகளை தனித் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வினைக்காண முன்வரவேண்டுமென்றும், இலங்கை அரசினை அர்த்தமுள்ள சகலாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றினை முன்வைக்கும்படி வேண்டியிருந்தது என்றும் இந்தியாவின் அந்த நிலைப்பாட்டில் தற்போதுகூட மாற்றமேதுமில்லை என்றும் தெரிவித்தார்
  • பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் தேர்தல்-முஷாரஃப் அறிவிப்பு : பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதிக்கு முன்னர் பொதுத் தேர்தல்களை நடத்த தாம் விரும்புவதாக அந்நாட்டு அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார். இருந்த போதிலும் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க ஏதுவாக அங்கு அமலில் இருக்கும் நெருக்கடி நிலையை தளர்த்த அவர் மறுத்து விட்டார்
  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான தூதர் பர்மா விஜயம் : ஐக்கிய நாடுகள் சபையின் பர்மாவுக்கான மனித உரிமைகள் குறித்த தூதர் பர்மா சென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக அவர் அங்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளார்
  • இஸ்ரேலியப் பிரதமர் மீது ஊழல் தொடர்பான விசாரணைகள் : இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் ஓல்மர்ட் அவர்களுக்கு எதிராக கூறப்படும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் தொடர்பாக, அந்நாட்டு காவல் துறையினர் இருபதுக்கும் அதிகமான அரச கட்டிடங்கள் மற்றும் தனியார் அலுவலங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்
  • சூறாவளியால் ரஷ்யா கப்பல்கள் மூழ்கியுள்ளன : ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையிலான கெர்ச் வளைகுடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் நான்கு கப்பல்கள் நாசமடைந்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
  • இன்றைய (நவம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews