August 05, 2007

'நிலாச்சாரல்' இணைய சஞ்சிகைக்காக டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களை நான் எடுத்த செவ்வி

என்னைப் பொறுத்தவரை அவசியத்தின் காரணமாய் இடம் மாறினாலும் என் கொள்கையைப் பொறுத்தவரை நான் என்றுமே தமிழ்க் கலாசாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பாதவள். இதனால் நான் அமெரிக்கக் கலாச்சார விரோதி என்பது பொருளல்ல. அவரவர் கலாச்சாரத்தைப் பின்பற்ற அவரவர்க்கு உரிமை உண்டு. "திணிக்கப் படுவதல்ல கலாச்சாரம்". நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தியையே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். லண்டனில் வட்டமேசை மாநாட்டிற்கு ஒரு இந்தியராகவே உடை அணிந்து சென்றது இந்தத் தலைமுறையினருக்கு எந்த அளவிற்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. பாரம்பரியக் கலாச்சாரம் அழிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதனால் நான் ஒரு conservative என்று முடிவெடுத்து விடவேண்டாம். "புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்ளவேண்டாம்" என்பதுதான் என் கருத்து. தொடாந்து படிக்க இணைப்பில் செல்க..

சென்னையிலிருந்து மும்பைக்கு ஆட்டோவில் பயணம்!

76 ஆட்டோ ரிக்ஷாக்கள் ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா, லண்டன் போன்ற 8 நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்து 2 பேரும் சென்னையிலிருந்து மும்பைக்கு சுமார் 1921 கி.மீ. தூரம் 3 மாநிலங்களின் வழியாகச் செல்கின்றனர். சமூக சேவையை கருத்தில்கொண்டு நடைபெறுகிறது. நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல், கிராம மக்களிடம் நெருங்கிப்பழகுதல் போன்றவை இந்தப்பயணத்தில் குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்கள்!

தமிழோசை

  • இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
  • அகதிகளாக வந்த 19 பேர் இராமேஸ்வரத்திலிருந்து தப்பி மன்னார் சென்றுவிட்டனர்
  • புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் லண்டனில் நாடகம்
  • பீகார் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஒரு கோடிக்கு மேல் மக்கள் இடம் பெயர்வு
  • ஏராளமானோர் வீடிழந்தனர்
  • பலி எண்ணிக்கை உயர்வு போன்ற
  • இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலின் ஆகஸ்ட் மாதத் திருவிழாவையொட்டி, ஒரு வருடகாலமாக மூடப்பட்டிருந்த நேரடியாகச் செல்லும் வீதி வரும் 10 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது போன்ற

இன்றைய (ஆகஸ்ட் 05 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" கேட்க செய்திகள் இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்

அறத்துப்பால் : மக்கட்பேறு

"நான் ஒரு வெண்மேகம் எனக்கு வடிவம் கிடையாது, பாதை கிடையாது. மனமோ எதிர்காலமோ கிடையாது. இங்கே, இப்போது மட்டும் இருப்பது. காரணமற்ற ஒரு மனமே மதி உணர்வுள்ளது. சொந்தமான தடம் கிடையாது. அலைந்து திரிவது"
- ஓஷோ

இந்திய மற்றும் தமிழகச் சாலைகள் பற்றிய ஒரு அலசல்

இட ஒதுக்கீடு பற்றிய ஒரு பார்வை

பொருளாதார வளர்ச்சிபற்றிய ஒரு ஆய்வு

நீங்கள் ஒருவருக்கு பணிந்து நடக்கும் சூழ்நிலை வந்தால், அவர்களிடமிருந்து விலகி வேண்டுமானால் இருக்கலாம். அதற்காக பயந்து ஒதுங்கிவிடக்கூடாது. உங்களது முழு வலிமை, நேர்மை மற்றும் பொறுமையை பயன்படுத்தி அச்சத்தை மனதில் இருந்து அறவே விலக்கிவிட வேண்டும். அச்சம் கொண்டுள்ளவர்களைக் கண்டால், கோழை கூட மிரட்டி விளையாடுவான். எனவே, அச்சம் தவிருங்கள்.

- ஸ்ரீஅன்னை

இன்றைய குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது

அறத்துப்பால் : மக்கட்பேறு