September 30, 2007

கவியரசு கண்ணதாசனின் குரலில் "அர்த்தமுள்ள இந்துமதம்"

சேதுசமுத்திரத்தில் ஆரம்பித்து இராமாயணம், மகாபாரதம் வரை சர்ச்சை கிளம்பியுள்ள இந்த நேரத்தில் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய சொற்பொழிவை அவர் குரலாலேயே கேட்கத்தோன்றியது. எனவே இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இது மட்டுமல்ல இன்னும் இது சம்பந்தமான பதிவுகளும், இதைப்பற்றிய அவரின் குரலும் தொடர்ந்து வரும்...
Powered by eSnips.com

இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள எண்ணிலடங்கா இதயங்களே! இதோ ஓர் இதயத்தின் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!!

"இன்று இதயதினம்"



பிளாக்மெயிலுக்காக கருணாநிதி உண்ணாவிரதம்!?

  • சுப்ரீம் கோர்ட் தடை என்ன ஆச்சு? : பொதுமக்கள் கேள்வி


சென்னை : தமிழகத்தில் பந்த் நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் வழக்கம்போல பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதலே மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகளையும் மூடச் சொல்லி வற்புறுத்தப்பட்டன. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் சுப்ரீம் கோர்ட் தடை என்ன ஆச்சு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பஸ்சுக்காக காலையில் இருந்து மணிக்கணக்கில் காத்திருந்த ‌பொதுமக்கள் அரசு பஸ்கள் இயக்கப்படாததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

  • உண்ணாவிரதம் துவங்கினார் கருணாநிதி : ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு


சென்னை : தி.மு.க. அறிவித்த முழு அடைப்புக்கு சுப்ரிம் கோர்ட் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று (1ம்தேதி) உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையொட்டி சென்னை வாலாஜா சாலை அரசினர் விருந்தினர் இல்லம் முன்பு இரவோடு இரவாக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு முதல்வர் கருணாநிதி உண்ணாவிரத மேடைக்கு வந்து அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். அவருடன் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், காங்கிஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.‌கே.வாசன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, அன்பழகன் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதேப்போல தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

  • கோவையில் கடைகளை மூடச் சொல்லி கல்வீச்சு பதட்டம்


கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை சாய்பாபா காலனியில் ஓருசில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த ஒரு கும்பல் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியது. கற்களை வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

  • தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடவில்லை : பந்த் இல்லை என்பது கண்துடைப்பு


சென்னை : சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (1ம் தேதி) பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பந்த்திற்கு சுப்ரிம் கோர்ட் நேற்று அதிரடியாக தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சேது திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அறிவித்தார். பந்த் இல்லை என்று தெரிவித்திருந்தாலும் மாநிலம் முழுவதும் பஸ்கள் எதுவும் இன்று ஓடவில்லை. சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி என அனைத்து நகரங்களிலும் அரசு பஸ்கள் இயங்கவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடாததால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பந்த் இல்லை என்பது வெறும் கண்துடைப்பாகிப் போனது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.

  • மதுரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு


மதுரை : முழு அடைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதுரையில் இயக்கப்பட்ட தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கப்பட்டது. காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசியது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.



பிளாக்மெயிலுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் : வி.எச்.பி. கருத்து


அகமதாபாத் : சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று (1ம்தேதி) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விசுவ இந்து பரிஷத் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா, கருணாநிதியின் உண்ணாவிரதம் பிளாக்மெயில் போல உள்ளது என்றார். சுப்ரிம் கோர்ட்டின் உத்தரவு மகிழ்ச்சி தரத் தக்கதாக இருப்பதாகவும் தொகாடியா கூறியுள்ளார்.

இன்றைய குறள்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவு நிலைமை என்பதற்கு அழகாகும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

பொன்மொழி

"தோல்வி மூலம் நாம் பெறப்போகும் உத்திகளுக்காகவேணும் மனிதன் தோல்வியுறவேண்டும்"

  • திமுக-வின் முழு அடைப்புக்கு உச்சநீதிமன்றம் தடை : திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் திங்கட்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திங்கட்கிழமையோ அல்லது அதன் பிறகு வேறு எந்த நாளிலுமோ இந்தப் போராட்டத்தை நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும் வழக்கத்துக்கு மாறாக சிறப்பு அமர்வு மூலம். பி.என். அகர்வால் மற்றும் பி.பி. நவ்லேகர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்தது.
    ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதம்ஸ் பாலம் பகுதியை இடிக்கக் கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தன. உண்ணாவிரதம் இருக்கிற போகிறார் தமிழக முதல்வர் அதை எதிர்த்து அதிமுக சார்பிலும் மேலும் சிலரது சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை ஞாயிற்றுகிழமை காலை மூன்று மணி நேரம் நடைபெற்றது. பந்த் என்று தீர்மானித்த பிறகும் அதற்குத் தடை விதிக்கத் தவறியதன் மூலம் உயர்நீதிமன்றம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் உரிமைகளைவிட பொதுமக்களின் உரிமைதான் முக்கியமானது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இந்த விசாரணையின்போது அனைத்துத் தரப்பினரும் ஆச்சரியப்படும் வகையில் சேதுசமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவதை எதிர்க்கவில்லை என்று திமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்தப் பிரச்சினையைப் பற்றி இப்போது நீதிமன்றம் கவலைப்படவில்லை என்றும் பந்த் நடத்தப்படுவது சரியா என்பதுதான் கேள்வி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். யாருக்கு எதிராக பந்த் நடத்துகிறீர்கள்? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த நீதிமன்றத்துக்கு எதிராகவா? என்று நீதிபதிகள் கேட்டனர். சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே பந்த் நடத்த நீதிமன்றம் தடை விதித்துவிட்டாலும் அதற்குப் பதிலாக திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி அறிவித்துள்ளார்
  • சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கை கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறது இலங்கையின் வல்லுநர் குழு : இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக்கு அண்மையாக சர்ச்சைக்குரிய இந்தியாவின் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடரப்பட்டால் இலங்கையின் கடல் வாழ் உயிரினங்களுக்கு, மூலப்பொருட்களுக்கும் அது கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துமென இந்தத்திட்டம் குறித்து ஆராந்துவரும் இலங்கை நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்தவரான லங்கா ஹைட்ரோலிக் இன்ஸ்டிடியூட்டின் நிறைவேற்று அதிகாரி, மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார். பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகள் இந்தியத் தரப்பினரைவிட நன்கு விரிவான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கடலின் தற்போதைய ஓட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதோடு, இங்கே கடலின் மடியில் வாழக்கூடிய தாவரங்கள், மற்றும் உயிரினங்களிற்கும் அவை எதிர்வுகூற முடியாத அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கடலின் மடியில் இருப்பதாகக் கூறப்படும் இராமர் சேது அணையின் குறுக்காக சுமார் 167 கிலோமீற்றர்கள் நீளமாக வெட்டப்படவுள்ள இந்தக் கப்பல் கால்வாய்த்திட்டம் குறித்த இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஏற்கனவே இலங்கை வெளிநாட்டமைச்சிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது
  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் : இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மெக்சிகோவில் நடைபெற்ற உலக சாம்பியனுக்கான செஸ் போட்டியின் இறுதி சுற்றில் ஹங்கேரி நாட்டின் பீட்டர் லீக்கோவை அவர் வெற்றி பெற்றார். இந்தப் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களிலும் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தமிழோசையிடம் ஆனந்த் தெரிவித்தார். இந்தப் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது என்றும், முக்கியமாக ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரை கிருஷ்சுக்கை வெற்றி கொண்டது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியை திங்கட்கிழமை விளையாட்டு அரங்கத்தில் கேட்கலாம்.
  • மன்னார் மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது : இலங்கையின் வடமேற்கே மன்னார் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசியபாதுகாப்புக்கான ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கள்ளிக்குளம் முன்னரங்க பகுதியிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தலிபான்கள் நிராகரிப்பு : ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் பேச்சுவார்த்தைக்கு விடுத்த அழைப்பை தலிபான்கள் சார்பில் பேசவல்லவர் நிராகரித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானில் அன்னியப் படைகள் இருக்கும் வரையில் தலிபான்கள் ஒரு போதும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமாட்டார்கள் என காரி யூசப் அஹமதி என்ற அப்பேச்சுவார்த்தையாளர் கூறினார்
  • எகிப்தில் சிக்கித்தவித்த பாலஸ்தீனர்கள் காசா திரும்ப அனுமதி : கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக எகிப்தில் சிக்கித்தவித்து வந்த 85 பாலஸ்தீனர்கள், காசாவிற்கு திரும்புவதற்கு எகிப்து அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்

நீ மனிதனாகிறாய்

"எப்போது மற்றவரின் துன்பத்தை உன்னுடையதாய் நினைக்கிறாயோ அப்போதுதான் நீ மனிதனாகிறாய்"

ஐ.ஒ.தூரிகை (I.O.Brush)


September 29, 2007

5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

1. சர்க்கரை நோய் என்றால் என்ன?


முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்றுபார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. க்ளுகோஸ் எனும் சர்க்கரைதான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்றுவைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால்தான் அது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.


2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?


பல காரணங்களால் இது நிகழலாம். தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம். இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.


3. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.


4. சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?


பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், அதிக பசி, மிக வேகமாக எடை குறைதல், அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல், திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப் பையில் தொற்று நோய்


5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?


இரண்டாம் வகை சர்க்கரை நோயால் ஏற்படக் கூடியவை. பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு

இன்றைய குறள்

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

அறத்துப்பால் : நடுவு நிலைமை

கிழக்குக் கடற்கரைச்சாலை - நமது சென்னை


கோவை குண்டு வெடிப்பு அப்துல் நாசர் மதானி விடுதலை

கோவை குண்டு வெடிப்பு வழக்குத் தீர்ப்பு : தமிழகத்தின் கோவை நகரில் 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முதல் தண்டனை வழங்கத் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, 41 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது
திமுகவின் முழு அடைப்புக்குத் தடை இல்லை : இதனிடையே, சேதுசமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் அக்டோபர் முதலாம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, முழு அடைப்புப் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என நீதிபதிகள் அறிவித்தனர்.
எச்ஐவி தொற்றிய தாயின் குழந்தை பராமரிப்பு யார் வசம்? வட இந்திய மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால், அவரது 9 வயது பெண் குழந்தையை அவருடைய பராமரிப்பில் விட முடியாது என்று அந்த மாநிலத்தில் இருக்கும் கீழ் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள் மத்தியில், இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எச்ஐவி தொற்றை காரணம் காட்டி தங்களுக்கான அடைப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக இவர்களுக்கான குழுக்கள் குரல் கொடுத்தன. இந்த பின்னணியில் சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் இன்று தடை விதித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, எச்ஐவி தொற்றுக்கு உள்ளான பெண்கள் கூட்டமைப்பின் தலைவி பி.கவுசல்யா அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
திருகோணமலை கடற்பரப்பில் கடுமையான மோதல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டைக் கடற்பரப்பில், இலங்கைக் கடற்படையினருக்கும், விடுதலைப்புலிகளின் அமைப்பின், கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் மோதல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 18 பேர்வரை கொல்லப்பட்டதாகவும் கடற்புலிகளின் 3 படகுகளை கடற்படையினர் நிர்மூலம் செய்ததாகவும், இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்
வவுனியா மற்றும் மன்னாரில் வீடுகள் கையளிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிச் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என இப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள 230 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகை தந்த பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இன்றைய (செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

விட்டமின்கள்

விட்டமின் E, விட்டமின் C, B விட்டமின்கள், விட்டமின் D, கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்பு : சில வருடங்கள் முன்பு வரை மல்டி விட்டமின் மாத்திரைகள் கொஞ்சம் அபூர்வம். இப்போது நிறைய புதுப்புது மாத்திரைகள், டானிக்குகள் வந்து விட்டன. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் இருபாலருக்கும் வெவ்வேறு வயதில் தினமும் பெற வேண்டிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களின் அளவை பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் பத்தில் ஒருவர் தான் சரியான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களை உணவு மூலமாக பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவை உட்கொள்வதே
இல்லை. இதனாலேயே தற்போது மருத்துவர்கள் அதிக அளவில் மல்டி விட்டமின்களைப் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. நீங்கள் விட்டமின் மாத்திரை அல்லது தாது புஷ்டி டானிக் உட்கொள்ள நினைத்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

விட்டமின் E:
தினசரி அளவு அபாய அளவு 15mg (சிந்தெடிக் Eயில் 33 IU அளவு) 1000 IU அளவு - உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக் கூடியது. கண்ணில் காட்ராக்ட் ஏற்படுவதைத் தவிர்க்கும். அல்ஜைமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும். பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'ஜெப்ரி ப்ளும்பெர்க்' என்பவர் ஒரு நாளைக்கு 100 முதல் 400 IU அளவு இந்த விட்டமினைப் பெறுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறார். அபாய அளவு தாண்டி உட்கொண்டால் மூளை உறைந்து போக வாய்ப்புண்டு (Haemorrhage). மேலும் ரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதால் காயம் பட்டால் சிரமமும் ஏற்படும்.

விட்டமின் C:
தினசரி அளவு அபாய அளவு பெண்களுக்கு 75mg ஆண்களுக்கு 90mg தொடர்ந்து 2000mgக்கு மேல் விட்டமின் C - யால் சளி தடுக்கப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சளி பிடிக்கும் ஆரம்பகட்டங்களில் அதிக அளவு விட்டமின் C - யை தினமும் உட்கொள்பவர்களுக்கு சளியின் தாக்கம் குறைவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளுக்குத் தேவையான அளவு சராசரியாக ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றில் கிடைக்கிறது. புகைப் பிடிப்பவர்கள் மேலும் ஒரு 35mg அளவு உட்கொள்ள வேண்டும். அபாய அளவு மீறினால் வயிற்றுப் பிடிப்பு, மூச்சடைப்பு, கழிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளில் 200mg அளவைத் தாண்டினாலே குடலின் உறிஞ்சும் தன்மை குறையும், குடலில் வருகின்ற கழிவுப் பொருட்களில் நீர் உறிஞ்சப்படாவிட்டால் மலம் கழிச்சலாகப் போகும்.

B விட்டமின்கள்:
தினசரி அளவு அபாய அளவு 50 வயதிற்குள் 1.3mg 50 வயதிற்கு மேல் ஆண்கள் 1.7mg பெண்கள் 1.5mg 1000mgக்கு அதிகமான போலிக் அமிலம். B6 - 100mg. போலிக் அமிலம் (Folic Acid) (B12 மற்றும் B6) இதயத்தைப் பாதுகாக்கும், பிறப்பில் ஏற்பட்ட குறைகளை நீக்கும், வயோதிகத்திலும் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ரத்ததில் உள்ள ஹோமோசிஸ்டீன் (homocysteine) எனும் பொருளின் அளவைச் சீராக வைத்திருக்கும். இந்த அளவு
உயர்ந்தால் இதய நோய், சுவாசக் கோளாறுகள் முதலியவைகளுக்கு வழி வகுக்கக் கூடியது. கொஞ்ச நாளாகவே மூளை வழக்கமான சுறுசுறுப்போடு இல்லையே என்று தோன்றினால் உங்களுக்கு விட்டமின் B12 குறைபாடு இருக்கலாம். இதன் அளவு மிகக் குறைந்தால் தளர்வு, நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும். வயோதிகர்களுக்கு உணவிலிருந்து B12ஐப் பெறும் தன்மை குறைவதால் அவர்களுக்கு B12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அபாய அளவைத் தாண்டினால் போலிக் அமிலம் B12 குறைபாட்டை நிறைவு செய்வதற்கு பதிலாக நரம்புச் சிதைவில் முடியும். தொடர்ந்து அதிக அளவு உட்கொண்டால் நிலை தடுமாற்றம், மரத்துப் போதல், தசை பலவீனம், நரம்புச் சிதைவு ஆகியவை ஏற்படக் கூடும். ஆனால் தேவையான அளவை மிஞ்சும் ஆபத்து சாதாரணமாக ஏற்படுவதில்லை.

கால்சியம்:
தினசரி அளவு அபாய அளவு 50 வயது வரை 1000mg 50 வயதுக்கு மேல் 1200mg - 2500mg வலுவான பற்களுக்கும், வலுவான எலும்புகளுக்கும் கால்சியம் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோயைத் தவிர்க்கவும் கால்சியம் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி தேவைப்படும் அளவை சமீபத்தில் கூட்டி அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக மூன்று அல்லது நான்கு டம்ளர் ஸ்கிம்டு பாலில் ஒரு நாளின் தேவை கிடைக்கும். அபாய அளவைத் தாண்டினால் மலச்சிக்கலும், சிறுநீரகக் கோளாறுகளும் உருவாகலாம்.

விட்டமின் D:
தினசரி அளவு அபாய அளவு 50 வயதிற்குள் - 200 IU 50 முதல் 70 வரை - 400 IU 70 வயதிற்கு மேல் - 600 IU தொடர்ந்து 1000 - 2000 IU - கால்சியம் மட்டும் தனியே உடலுக்கு பயனளிக்காது. அத்துடன் இந்த 'சூரிய ஒளி' விட்டமினும் கிடைக்கபெற வேண்டும். கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்களை நமது உடல் ஏற்றுக் கொள்வதற்கு விட்டமின் D உதவி செய்கிறது. இது பால், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற மிகச் சில உணவுப் பொருள்களில்
மட்டுமே கிடைக்கிறது. ஆனால் சூரிய ஒளி உடலில் படும்போது தோலின் அடியில் இது உற்பத்தியாகிறது. ஆகையால் நீங்கள் வெயிலே படாதவராகவோ, மொடாப் பால்குடியராகவோ இல்லாவிட்டால் உங்களுக்குத் தேவையான அளவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அபாய அளவைத்
தாண்டி தொடர்ந்து உட்கொண்டால் மூச்சடைப்பு, தளர்ச்சி, இதயத் துடிப்பு
வேறுபாடு ஆகியவை ஏற்படக்கூடும்.

மக்னீசியம்:
தினசரி அளவு அபாய அளவு ஆண் - 420mg பெண் - 320mg 320mg - பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து
உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. ஒரு சராசரி மல்டிவிட்டமின் மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது. 350mg-க்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும்
ஏற்படும்.

இரும்பு:
தினசரி அளவு அபாய அளவு பெண் 50 வயதிற்குள் - 15mg 75mg - குழந்தைகள், விடலைகள் (Teenagers), குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம்
ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.

பருத்திவீரன் முதல் பனிக்கட்டிப் பென்(ண்)குயின்

அடி என்னடி ராக்கம்மா

பின்னனிப்பாடகி கலகல...கல்பனா

September 28, 2007

பிரபஞ்சன்

எனக்குப்பிடித்த எத்தனையோ சிறுகதைகளில் இதுவும் ஒன்று. உங்களுக்கும் பிடிக்கும் தொடர்ந்து படியுங்கள். ஹேமாவதியைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். சென்றாலும், பெரிய கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஒரு தீர்மானத்தில் நான் இருந்தேன். இரண்டு முடிவுகளையும் நான் மீறும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது.இது இப்படித்தான். நான் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று என் டயரியில், டிசம்பர் மாதத்துக் கடைசி நாளில் எழுதி வைக்கிறேனோ, அதே காரியங்களை ஜனவரி முதல் தேதியிலிருந்தே செய்யும்படியாக ஆகிவிடும்.என் நண்பர், அழகிய புதுவருஷத்து டயரி ஒன்றை எனக்கு அன்பளித்தார். டிசம்பர் மாதத்துக் கடைசி நாளில், இரவு முழுக்க விழித்திருந்து, மணி பன்னிரண்டைத் தொட்ட அந்த நிமிஷம், டயரியை எடுத்துப் புது வருஷத்துக்கு நல்வரவு கூறி ஒரு கவிதை எழுதினேன். பிறகு என் சங்கல்பங்களை எழுதினேன். என் சங்கல்பங்கள் கை விரல் எண்ணிக்கையில் அடங்குபவை. அவைகளில், நான் கடைசியாக எழுதியது இதுதான். 'எந்தச் சந்தர்ப்பத்திலும் சுமதியை மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தும் இடங்களையோ, மனிதர்களையோ தேடி நான் போவதில்லை. என்னால் மீண்டும் அந்த வலி தாங்க முடியவில்லை!'
என்னை விடவும் வலிமை படைத்த கரம் ஒன்று, என் பிடரியைப் பிடித்து உந்தி, என்னை என் விருப்பத்துக்கெதிரான வழியில் நடத்திச் செல்கிறது என்றே நான் நம்புகிறேன். டிசம்பர் கடைசித் தேதி நான் எனக்கு விதித்துக்கொண்ட தடையை, ஜனவரி இருபதாம் தேதி மீறும்படியாக ஆனது. எனினும், எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கையில், என்னை ஒப்புக் கொடுத்தபின் எனக்கு நிகழ்வது நன்மைகளாகவே இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் தஞ்சை அனுபவமும் அவ்வாறாகவே முடிந்தது. இணைப்பில் தொடர்க... http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_331b.asp

"ராமர் என்ன கட்டிடப் பொறியாளரா பாலம் கட்டுவதற்கு?"

'தி.மு.க. ஆட்சியில் தனக்கு ஏதும் சலுகை கிடைக்கவில்லையே, இனி யாருக்கும் பல்லக்கு தூக்க மாட்டேன்' என்று விஜய டி. ராஜேந்தர் மனம் குமுறியதற்குக் கைமேல் பலன். சிறுசேமிப்பு துணை நிர்வாக அதிகாரியாகப் பதவி. Please click the link...http://www.nilacharal.com/tamil/politics/tamil_politics_331.asp

September 27, 2007

கேள்வி: சிரிப்பில் எத்தனை வகை உண்டு?

  • டாக்டர் ராம்தாஸ் கலைஞரைப் பார்த்து சிரிப்பது டார்ச்சர் சிரிப்பு.
  • கம்யூனிஸ்டுகளைப் பார்த்து மன்மோகன் சிரிப்பது நக்கல் சிரிப்பு.
  • மிருக வதைச் சட்டத்தைப் பார்த்து சல்மான்கான் சிரிப்பது கேலிச் சிரிப்பு.
  • டால்மியா வகையறாக்களைப் பார்த்து கங்குலி சிரிப்பது எக்காளச் சிரிப்பு.
  • சன் டி.வி.யைப் பார்த்துக் கருணாநிதி சிரிப்பது சவால் சிரிப்பு.
  • சிம்புவைப் பார்த்து நயன்தாரா சிரிப்பது எஸ்கேப் சிரிப்பு.
  • இப்படி சிரிப்பில், பல வகைகள்.

இன்றைய குறள்

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

"உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே" - சுவாமி விவேகானந்தர்

  • இலங்கையில் இரண்டு வயது பெண்குழந்தையை விற்க முற்பட்ட தகப்பன் கைது : இலங்கையின் வடமத்திய மாகாணமான தம்புள்ளயில் தனது இரண்டு வயதுப் பெண்குழந்தையை வாராந்தப் பொதுச் சந்தையொன்றில் விற்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்
  • உலக உல்லாசப் பயண தினம் இம்முறை இலங்கையில் கொண்டாடப்படுகிறது : இன்று உலக உல்லாசப்பயண தினமாகும். இதனையொட்டி 150 நாடுகளை அங்கத்தவர்களாகக்கொண்ட உலக உல்லாசப் பயண அமைப்பு தனது இவ்வருடக் கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்காக, அண்மைக் காலங்களில் உல்லாசப் பயணத்துறையில் மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இலங்கையைத் தெரிவுசெய்திருக்கிறது
  • பாகிஸ்தானின் அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன : பாகிஸ்தானில் மேலும் 5 வருடங்களுக்கு அதிபராகத் தொடர்வதற்கான, மறு தேர்தலுக்காக, அதிபர் முஷாரஃப் அவர்கள், தனது வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்துள்ளார்.
    மேலும் பல எதிர்க்கட்சி வேட்பாளர்களும், இன்று வியாழக்கிழமை காலை தமது மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதேவேளை, இராணுவத் தளபதியாக செயற்படும் சமகாலத்தில், அதிபராகவும் முஷாரஃப் அவர்கள் தொடர முடியாது என்று வாதிடும் எதிர்த்தரப்பினரால், தாக்கல் செய்யப்பட்ட, முஷாரஃப் அவர்களின் வேட்பாளருக்கான தகைமையைக் கேள்விக்குள்ளாக்கும் பல மனுக்கள் குறித்து, பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருகின்றது.
  • இலங்கை மோதல்களில் 19 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கை இராணுவத்தினர்இலஙகையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள், கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் இன்று மாத்திரம் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • பர்மாவில் தொடரும் போராட்டத்தில் ஒரே நாளில் குறைந்தது ஒன்பது பேர் பலி : பர்மாவின் பிரதான நகரான ரங்கூனில் மற்றுமொரு நாளாக நடந்த மோதல்களில் ஒன்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், பதினோரு பேர் காயமடைந்ததாகவும், பர்மிய அரசு கூறுகிறது
  • பர்மாவில் போராட்டங்களை நடத்துபவர்கள் மீது வன்செயல்களை பிரயோகிக்கக் கூடாது என்று அமெரிக்க வலியுறித்தியுள்ளது : பர்மாவில், அமைதியான போராட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராக வன்செயல்கள் மேற்கொள்ளப்படுவதாக விபரித்துள்ள அமெரிக்கா, அவை நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது
  • பால்கன் போரில் முன்னாள் யூகோஸ்லாவியாவின் இரு இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகள் என அறிவிப்பு : பால்கன் போரின் ஆரம்பத்தில், 1991 ஆம் ஆண்டில், குரோசியாவின், வுகோவார் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பில், யூகோஸ்லாவியாவின், இரண்டு இராணுவ அதிகாரிகளை, த ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச தீர்ப்பாயம், குற்றவாளிகளாகக் கண்டுள்ளது
  • விண்வெளியில் நாசாவின் புதிய ஓடம் செலுத்தப்பட்டது : செவ்வாய் கிரகமும், வியாழன் கிரகமும் சுற்றிவரும் பாதைகளுக்கு இடையே இருக்கின்ற பகுதியில் உள்ள விண்கற்களின் தொகுதிக்கு முதற்தடவையாக விஜயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும், ஒரு விண் ஓடத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஏவியுள்ளது

September 26, 2007

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் இலட்சக்கணக்கானவர்கள் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்தோம். அவரது நேர்காணல் இங்கே.

தென்கச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?

தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரத்துச் சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். காஞ்சி பல்லவ மன்னனின் படைவீரர்களின் ஒரு பகுதியினர் குடியேறி உருவான ஊர் இது என்று எங்கள் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பழங்கால கத்திகள் கேடயங்கள் இப்போதும் எங்கள் வீடுகளில் உண்டு.

தென்கச்சி கோ.சுவாமிநாதனைப் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் பகுதியில் சுவாமிநாதன்கள் நிறையபேர் உண்டு. சுவாமிமலை பக்கத்தில் இருப்பது ஒரு காரணம். கும்பகோணத்தில் படிக்கிறபோது ஒரே வகுப்பில் நிறைய சுவாமிநாதன்கள் இருந்தோம். அடையாளம் தெரிவதற்காக வகுப்பு ஆசிரியர் ஊர்ப் பெயரையும் சேர்த்துவிட்டார்.

'இன்று ஒரு தகவல்' - என்ற சிந்தனை எப்படி வந்தது?

இந்த சிந்தனை எனக்கு வரவில்லை. சென்னை வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம் அவர்களுக்கு வந்தது.

இதுவரைக்கும் எத்தனை இன்றுகளைக் கடந்திருக்கிறீர்கள்?

இதுவரைக்கு 11 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன்.

மறக்க முடியாத இன்று எது?

இன்று ஒரு தகவலை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று என்றைக்கு என்னுடைய அதிகாரிகள் சொல்கிறார்களோ அன்றுதான் எனக்கு மறக்கமுடியாத இன்று.

கதை இல்லாமல் தகவலே சொல்வதில்லையே. தனியாகச் சிறுகதையோ நாவலோ எழுதியதுண்டா?

ஆரம்பகாலத்தில் என்னுடைய இளம் வயதில் ஒருசில சிறுகதைகள் எழுதியது உண்டு. என்னைவிட சிறப்பாக பலபேர் எழுதுவதைப் பார்த்ததும் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.

கொஞ்சம் இழுத்துப் பேசுகிற இந்த கிராமிய பாணிப்பேச்சு எப்போது வந்தது?

இழுத்துப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெரியுமா? மூச்சு வாங்குகிறது. அவ்வளவுதான்.

உங்கள் கிராமிய வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

கிராமிய வாழ்க்கையில் பட்டணங்களைக் கனவு கண்டு கொண்டிருந்தேன். பட்டண வாழ்க்கையில் கிராமங்களைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

உங்கள் கிராமத்தில் உங்களை மிகவும் கவர்ந்த மனிதர் யார்?

அப்படி ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவரைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் - நிலைக்கண்ணாடியில்!

அரசியலில் கூட்டணி பற்றி ஒரு கதை சொல்ல முடியுமா?

அரசியலைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:

"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம். இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"

கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"

அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"

உங்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட பாடல் எது? ஏன்?

"பத்தினிப்பெண்' என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடியிருக்கிற 'உலகம் என்பது ஒரு வீடு' என்கிற பாடல். காரணம் : அதன் அருமையான கருத்து அற்புதமான இசை.. இனிமையான குரல் எல்லாமும்தான்!

உண்மையைப் போன்ற ஒரு கற்பனையையும் கற்பனையைப் போன்ற ஓர் உண்மையையும் சொல்ல முடியுமா?

இது, விசு அல்லது அறிவொளி ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் யார்? எந்தக் காட்சியில் நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்தீர்கள்?

நாகேஷ்.

'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' என்கிற படம் பார்த்தபோது அப்படிச் சிரித்த அனுபவம் உண்டு.

நீங்கள் வீட்டில் இருக்கும்போது ஏதேனும் ஜோக் அடித்ததுண்டா?

ஜோக் அடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வருவதுண்டு.

உங்கள் திரையுலக அனுபவம் எப்படி இருந்தது?

திரையுலகத்தில் நீண்ட அனுபவம் ஏதுமில்லை. 'பெரிய மருது' - என்கிற படத்தில் டணால் தங்கவேலுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'காதலே நிம்மதி' - என்கிற படத்தில் நீதிபதியாக கொஞ்சநேரம் வந்தேன்.

அதன் விளைவு -
அதற்குப் பிறகு யாருமே என்னை நடிக்கக் கூப்பிடுவதில்லை!

உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது?

எனக்கு.. கேட்பது பிடிக்கும்! பேசுவது பிடிக்காது!

உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாமிநாதன் யார்? பேச்சாளரா? எழுத்தாளரா? உதவிநிலைய இயக்குநரா? குடும்பத் தலைவரா? நடிகரா?

படுத்துத் தூங்குகிற சுவாமிநாதனைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவரால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இல்லை!

இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ்

இன்றைய குறள்

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி

ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

"சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு"

- சுவாமி விவேகானந்தர்

  • 'உலக நாடுகளைப் பழிவாங்கும் கருவியாக மனித உரிமைகள் பயன்படுத்தப்படக் கூடாது' - ஐ.நா பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த உரை : மனித உரிமைகள் என்ற விடயத்தை உலக நாடுகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் ஒரு கருவியாக பயன் படுத்தக் கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்சபையின், 62 வது வருடாந்த சந்திப்புக்கான தனது உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்
  • பர்மா பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் கருத்து : பர்மா பிரச்சினை தொடர்பாக இந்தியா முதன் முறையாக இன்று கருத்துத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்மாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும், பர்மாவின் அரசியல் சீர்திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக, பரந்துபட்ட நடைமுறையாக இருக்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் விரும்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • பர்மாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது : பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது இராணுவத்தினர் தாக்கியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன
  • நேபாளத்தை குடியரசாக்குவதற்கு நேபாளி காங்கிரஸ் ஆதரவு : நேபாளத்தை குடியரசாக அறிவிப்பதற்கு, தனது ஆதரவை அந்த நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான நேபாளி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    இந்த ஆண்டு நவமபர் மாதம் தேர்தெடுக்கப்படவுள்ள அரசியல் சாசன சபை, இந்த மாற்றத்ததை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளனர்
  • இலங்கையின் வடபகுதி மோதலில் 13 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தைக்கு மேற்கில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் எறிகணை வீச்சு மற்றும் நேரடி மோதல்களில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 9 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது

இராமர் பால ஆராய்ச்சியில் ஈடுபடும் அதிமேதாவிகளுக்கு எனது பணிவான வேண்டுகோள்!!

"சேது சமுத்திரத் திட்டத்தை வரவேற்பது ஒவ்வொரு தமிழனும்? ஏன் இந்தியனும் வரவேற்கத்தக்க ஒரு விசயம். நாமெல்லாம் அந்த இராமர் பாலத்திற்கு வரிந்து கட்டிக்கொண்டு விளக்கம் கொடுப்பதும், விதண்டாவாதம் பேசுவதையும் நிறுத்தினால் நலமாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். அதில் செலவழிக்கும் நேரத்தை, சேது சமுத்திரத்திட்டத்தின் மூலம் நாம் அடையப்போகும் பலன் என்ன? நன்மைகள் என்னென்ன? என்பதை விளக்கினால் உபயோகமாகவும், என்னைப்போன்ற பாமரர்களுக்குப் புரியாத விசயங்களைப் புரியவைத்த பாக்கியமும் உங்களைப்போன்ற, இன்னும் இந்த இராமர் பால ஆராய்ச்சியில் இறங்கி நோண்டிக் களைபறிக்கும் அதிமேதாவிகளுக்கும் புண்ணியமாகும். எனவே மேற்கொண்டு மண்டபத்திலிருந்து வானர சேனைகள் பாலமில்லாமல் இராமேஸ்வரத்திற்கு எப்படிப் போனார்கள், தனுஷ்கோடி இருந்தது உண்மையா? போன்றைவகளுக்கு விளக்கம் கேட்கப்படும் கேள்விகளும், அம்மாவுடன் கூடப்பிறந்த ஆண்களை ஏன் சின்னம்மா, பெரியம்மா என்று அழைக்காமல் மாமா என்று அழைக்கிறோம் என்று கேட்கப்படும் கேள்விகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். முடிந்தால் புரியாதவர்களுக்குப் புரியாத விசயங்களைப் புரியவைக்க நாமெல்லாம் சேர்ந்து முயற்சிப்போம்"
- நன்றி மனுநீதி

September 25, 2007

இன்றைய குறள்

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லலைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

"பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது" - சுவாமி விவேகானந்தர்

  • யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது : உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
  • அதிபராகத் தேர்தெடுக்கப்படாவிட்டால், இராணுவப் பொறுப்பில் தொடர முஷாரஃப் திட்டம் : அதிபர் முஷாரஃப்பாகிஸ்தானின் அதிபர் தேர்தலில் பர்வேஸ் முஷாரஃப் அவர்கள், மேலும் ஒரு பதவிக் காலத்துக்கு தேர்தெடுக்கப்படாவிட்டால், இராணுவத் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள அவர் எண்ணியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
  • காலநிலை மாற்றம் தொடர்பில் உலகத் தலைவர்களின் உடனடி நடவடிக்கை தேவை என்கிறார் ஐ.நா தலைமைச் செயலர் : காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலகத் தலைவர்கள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூண் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
  • புவி வெப்பமடைதலுக்கு மனிதனின் செயற்பாடே காரணம்: பிபிசி ஆய்வில் தகவல் : இதற்கிடையே, பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் கலந்து கொண்ட பெரும்பாலானோர், புவி வெப்பமடைதலுக்கு, ஒரு முக்கிய காரணியாகக மனிதனின் செயற்பாடே இருக்கிறது என்று கூறியுள்ளனர்
  • பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை : அதிபர் புஷ் பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்
  • யார் இந்த பர்மா ஜெனரல்கள்? : பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்
  • இன்றைய (செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

மேட்ரிமோனியல் பெயரில் இப்படியொரு மோசடி!

நூறு பெண்களை ஏமாற்றிய பலே ஆசாமி சிக்கினான் : திருமண வெப்சைட்டுகள் மூலம் மோசடி

சென்னை : திருமணம் செய்து கொள்வதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியவன் சிக்கினான். திருமண வெப்சைட்டுகள் மூலம் ஐ.ஏ.எஸ்., என்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் போலியாக விளம்பரம் கொடுத்து இதுவரை ஐந்து பெண்களை திருமணமும் செய்து கொண்டுள்ளான். திருமண ஆசை காண்பித்து, பல பெண்களிடம் உல்லாசம் அனுபவித்தும் பணத்தை சுருட்டியிருப்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நெய்வேலியைச் சேர்ந்தவர் லியாகத் அலி(34); கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவன். நெய்வேலியிலேயே கம்ப்யூட்டர் மையத்தை நடத்திய லியாகத் அலிக்கும், கடலூரைச் சேர்ந்த சபரியாவுக்கும் (28) அவரது பெற்றோரால் கடந்த 2002-ல் திருமணம் நடந்தது. தற்போது ரூபினா (2) குழந்தை உள்ளது. நெய்வேலியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி நஷ்டமடைந்ததால், பின்னர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் கம்ப்யூட்டர் மையத்தை தொடங்கினான். அங்கு கம்ப்யூட்டர் மையம் என்ற பெயரில், கள்ள ரூபாய் நோட்டு கும்பலுடன் செயல்பட்டு ஏமாற்றிய வழக்கில் திருச்சி பாலக்கரை போலீசாரால் லியாகத் அலி கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஜாமீனில் வெளியே வந்த லியாகத் அலி, மணமாலை டாட் காமில் பணிபுரிந்த நண்பர் முருகானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கம்ப்யூட்டரில் கைதேர்ந்த லியாகத் அலி, "ராஜேஷ் சாப்ட்வேர் இன்ஜினியர், சுதாகர் ஐ.ஏ.எஸ், சந்தீப்சிங் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் புதிய வெப்சைட்டை தொடங்கினான். அந்த வெப்சைட்டின் முகவரி மற்றும் மொபைல் போன்களின் நம்பரை மட்டுமே கொடுத்து மணமாலை டாட் காமில் நண்பரின் உதவியுடன் வரன்களை தேடுவதுபோல் விளம்பரப்படுத்தினான். குறிப்பாக விவாகரத்தான, ஊனமுற்ற, விதவை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்ததால் விளம்பரத்தை பார்த்து பல பெண்கள் ஆச்சரியப்பட்டனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சங்கீதா, சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரும், "ராஜேஷ் சாப்ட்வேர் இன்ஜினியர், லண்டன்' என்ற விளம்பரத்தைக் கண்டு விண்ணப்பித்தார். மொபைல்போனில் மட்டுமே சங்கீதா மற்றும் அவரது தாயிடம் லியாகத் அலி முதலில் பேசினான். தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே லண்டன்தான் என்றும், லண்டனுக்கு எந்த விமானத்தில் செல்வது, எவ்வளவு லக்கேஜ் விமானத்தில் எடுத்து சென்றால் அனுமதிப்பர், மேற்கொண்டு லக்கேஜ்ஜை கார்கோவில் அனுப்பினால் குறைந்த கட்டணமே வசூலிப்பர் மற்றும் உலக விஷயங்களை அனைத்தும் கரைத்து குடித்தவன் போல் இன்டர்நெட்டில் இருக்கும் தகவல்களை திரட்டி அசத்தினான். இதனை உண்மையென நம்பிய சங்கீதா குடும்பத்தினர், லியாகத் அலி சொல்வதை கேட்டு ஆச்சரியப்பட்டனர். அவரை சந்திக்க மும்பைக்கு சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றனர். லண்டனில் இருந்து தற்போதுதான் வந்ததாகவும், வரும் வழியில் லக்கேஜ் தவறவிட்டதாகக் கூறி பதட்டமடைவதுபோல் "பாவ்லா' காண்பித்தான். இன்னும் இரண்டு நாளில் லண்டன் போக வேண்டுமே விசா எடுக்க பணம் இல்லையே என்று கூறியதும், பெற்றோரிடம் இருந்து சங்கீதா லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொடுத்தார். அந்த பணத்தில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக செலவழித்து வந்தான்.
ஈரோட்டில் அரசு அதிகாரியாக பணிபுரியும் விவேகானந்தன், தனது தங்கை சகானாவின் ஊனமுற்ற மகளுக்கு மணமாலை டாட் காமில் விண்ணப்பித்தார். இவரும் மணமாலை டாட் காமில் "சுதாகர் ஐ.ஏ.எஸ் விளம்பரத்தைக் கண்டு ஏமாந்தார். விமானத்தில் வந்த லியாகத் அலியை கண்டு விவேகானந்தன் உள்ளிட்ட பலர் நல்ல வரன் கிடைத்துவிட்டதாக நினைத்தனர். பேச்சுவாக்கில் விவேகானந்தனின் மகனுக்கு தனக்கு தெரிந்தவரிடம் சொல்லி இன்ஜினியரிங் சீட்டு வாங்கித் தருவதாக லியாகத்அலி ரூ.50 ஆயிரத்தை முன்பணமாக பெற்றான். சந்தேகமடைந்த விவேகானந்தன், லியாகத் அலியை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மீதப் பணத்தையும் கொடுத்தால் சீட்டு வாங்கித் தருவதாக ஏமாற்ற முயன்ற லியாகத் அலியின் போட்டோவை வைத்து அவரது சொந்த ஊரான நெய்வேலிக்கு சென்று விசாரித்தார். லியாகத் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து வடக்கு இணை கமிஷனர் ரவியிடம் விவேகானந்தன் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து, இணை கமிஷனர் ரவியின் தனிப்படை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார் விவேகானந்தனின் மொபைல்போன்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, கடலூர் கூத்தப்பாக்கம் மனைவியின் வீட்டில் லியாகத் அலியை தனிப்படை போலீஸ் சுற்றிவளைத்தது. இவனிடம் நடத்திய தொடர் விசாரணையில், நாக்பூரைச் சேர்ந்த ஸ்ரீமா (26), மும்பையைச் சேர்ந்த சித்ரா(27), திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜூடு (25) உள்ளிட்ட ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும், 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது.
பெண்களை மயக்கியது எப்படி? : சென்னையில் கைது செய்யப்பட்ட லியாகத் அலி, பெண்களை ஏமாற்ற "பாரத் மெட்ரிமோனி.காம்" என்ற இணைய தளத்தையே அதிகளவு பயன்படுத்தி உள்ளான். இவனது தந்தை நூருல்லா கான் நெய்வேலியில் வசித்து வருகிறார். தாய் ஜமீலா பஹ்ரைன் நாட்டில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவனது தம்பி இப்ராகிம், தங்கை ரஹ்மத் பீவி ஆகியோரும் உள்ளனர். மணமகன்களை தேடி இணைய தளத்தில் பதிவான இளம்பெண்களை தொடர்பு கொண்டு அவர்களது வசதிகளை கேட்டறிந்து அதற்கேற்ப தன்னை சாப்ட்வேர் இன்ஜினியர் என்றோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்றோ அறிமுகப்படுத்திக் கொள்வான். பிறகு அவர்களை தான் தங்கியிருக்கும் லாட்ஜூக்கோ, கெஸ்ட் அவுசிற்கோ வரவழைத்து அவரது பாஸ்போர்ட்டை பெறுவான். வெளிநாட்டுக்குச் செல்ல விசா எடுக்க வேண்டும் என்று கூறி பணத்தையும் பெற்றுக் கொள்வான். அப்பெண்ணிடம் இருந்து பணத்தை பெற அவன் செய்யும் தந்திரம் வித்தியாசமானது. அப்பெண்ணின் வங்கி கணக்கில் பணத்தை போடச் சொல்லிவிடுவான். பிறகு, அப்பெண்ணின் ஏ.டி.எம் கார்டு மூலமாகவே பணத்தை எடுத்து தரும்படி கூறுவான். இதன் மூலம் அப்பெண்தான் பணத்தை வங்கியிலிருந்து பெற்றதாகவே கருத முடியும் என்ற நிலையை உருவாக்கி தந்திரமாக மோசடி வேலை செய்துள்ளான். ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறி கொண்ட இவன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு இன்ஸ்பெக்ஷன் செல்வதாக கூறி பல பெண்களை அழைத்து சென்று அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளான். திருச்சியில் மட்டும் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளான். இவன், நாட்டில் பல மாநிலங்களிலும் தன் நெட்வொர்க்கை விரிவு படுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்து திருமணம் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இணையதள நிறுவனங்களில் விசாரிக்க முடிவு : திருமணங்களுக்கான இணைய தளங்கள் என்ற பெயரில் செயல்படும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் போலியான தகவல்களை இணைய தளத்தில் அளித்து அதன் மூலம் இளம்பெண்கள் மற்றும் அவரை சார்ந்தோரை ஏமாற்றுவது தடுக்க வழிவகை காணப்படும். இணைய தளத்தில் அளிக்கப்படும் தகவல்கள் குறித்து உறுதி செய்யப்படவேண்டும். அதன் பிறகே இதுபோன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்ளவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும். அதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என வட சென்னை போலீஸ் இணை கமிஷனர் ரவி தெரிவித்துள்ளார்.
சில பெண்கள் லியாகத் அலியின் ஆங்கில பேச்சிலும், ஆடம்பரத்திலும் மயங்கி தனது கற்பையும் பறி கொடுத்துவிட்டனர். ஊட்டி, கொடைக்கானலில் "இன்ஸ்பெக்ஷன்' போகிறேன் என்று பல பெண்களிடம் கூறி, அவர்களை அங்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்துள்ளான். குறிப்பாக, மாப்பிள்ளை கிடைக்காமல் தவிக்கும் பெண்களையும், ஊனமுற்ற பெண்களின் இயலாமையையும் தனக்கு சாதகமாக்கி, கற்பை சூறையாடியுள்ளான். கைதான லியாகத் அலியிடம் இருந்து கார், லேப்டாப் கம்ப்யூட்டர், கேமரா, இரண்டு மொபைல் போன்கள், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவரிடம் ஏமாந்தவர்களின் விவரம் மற்றும் வேறு யாராவது பின்னணியில் செயல்படுகின்றனரா என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

September 24, 2007

ராமர்பால விவகாரம் பற்றி தா.பாண்டியன்!

மத வெறியைக் கிளப்பி குழப் பத்தை உண்டாக்கிப் பார்க்கும் கூட்டத்தினிடத்தில் இனியும் அமைதி காப்பது இயலாத காரியங்கள் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அவர் வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிட்டதாவது:இந்திய நாட்டில் மதவெறி சக்திகளின் அராஜகம், திமிர்த் தாண்டவம், ஆணவப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.விசுவ இந்து பரிசத்தின் தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனதா கட்சியின் முன் னாள் நாடாளுமன்ற உறுப் பினருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமரைப் பற்றி விமர்சித்ததற்காக, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவருக்கு தங்கம் பரிசளிக்கப்படும் எனவும், இந்தப் பரிசைத் துறவிகள் வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார். கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பது என்பது தமிழகத்தின் கழுத் தையே அறுப்பதற்குச் சமமா கும். இந்த மதவெறிக் கும்பல், மதவெறியைக் கிளப்பி, குழப் பத்தை ஏற்படுத்தி கல வரங்களுக்கு விதையூன்றுகிறது.இந்தக் கும்பலின் ஆத்திர மூட்டல்களுக்கு, மக்கள் இனியும் அமைதி காப்பது இயலாத காரியம். மத்திய அரசு உடனடியாக, உறுதியாக நடவடிக்கை எடுத்து மத வெறிக் கும்பல்களை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல், இந்திய நாட்டில் அமைதி குலையும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக் கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனிதனை விட மண்ணுக்கே மரியாதை - தா.பாண்டியன் வேதனை

திருநெல்வேலி : மனிதனுடைய உயிருக்கு கிடைக்கும் மரியாதையைவிட மணலுக்கு தான் அதிக மரியாதை கிடைக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நெல்லை மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் சுடலைமுத்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுக் கூட்டம் நடந்தது.

இதில் தா.பாண்டியன் பேசுகையில், தாமிரபரணியில் நடக்கும் மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நெல்லை மாவட்ட செயலாளர் சுடலைமுத்து கடந்த மாதம் வீரவநல்லூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது வன்மையாக கண்டிக்கதக்கது. சிறைகளுக்கு என்று தனி விதிகள் உள்ளன. 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற காலத்தில், முதல் 14 மாதங்கள் பரோலில் வர அனுமதி கிடையாது. ஆனால் சுடலைமுத்து கொலை தொடர்பாக தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் ஒரே மாதத்தில் பரோலில் வெளியே வந்தது காவல்துறையின் அக்கறையின்மையை காட்டுகிறது.

சுடலைமுத்து கொலையில் தொடர்புடையதாக 12 பேரின் பெயர்களை சாட்சியான நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் 4 பேர் மட்டுமே போலீசாரால் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே சுடலைமுத்துவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மனிதனை விட மணலுக்குதான் மரியாதை. மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய சுடலை முத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தேசிய நிர்வாக குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அரிகேசவநல்லூர் பஞ்சாயத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அயூப்கான் மட்டும் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

அயூப்கானுடன் சேர்ந்து போராடிய தலித் சமூகத்தை சேர்ந்த சுடலைமுத்து கொலை செய்யப்பட்டதன் மூலம் அரசின் கொள்கை கொல்லப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இன்னமும் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பதவியேற்ற சில நாட்களிலேயே சேரன்மாதேவி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய்த் துறையினர் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மணல் கொள்ளை நடப்பதற்கு இதுவே சாட்சி.

நெல்லை அருகே ஓமநல்லூரில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஏழை எளிய மக்கள் 56 பேர் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களுக்காக நல்லாட்சி செய்வதில் கருணாநிதி உறுதியாக இருப்பது உண்மையென்றால் அவர்கள் மீது போட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் 2

இன்றைய குறள்

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்கவேண்டும்.

அறத்துப்பால் : நடுவு நிலைமை

ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒரு பதிவு

(ஆங்கிலத்திற்கு மன்னிக்க) : Right to Emergency Care:


The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital. The hospital bears the responsibility of informing the police, first aid, etc.

Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need.

Date Of Judgment: 23/02/2007. Case No.: Appeal (civil) 919 of 2007.

"தன்னலம் சிறிதும் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்"

- சுவாமி விவேகானந்தர்

ராமர்பால விவகாரம் பற்றி நல்லகண்ணு!

ராமர் பாலம் எனும் முட்டாள்தனத்தை அரசியல் முதலீடாக்கி சிலர் தமிழகத்தின் பக்கம் திரும்பி யிருக்கிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முது‍பெரும் தலைவர் ஆர். நல்ல கண்ணு கூறியுள்ளார். ஆய்வுகளில் உணர்ச்சிக்கு இடம் தராமல் அறிவுக்கு இடம் தர வேண்டும். 7 லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனிதன் குழுக்கூட்டமாக வாழ்ந்து வந்தான். இங்கு எப்படி வந்தான்? பாலம் கட்டினான்? நம்முடைய வரலாறே 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் உள்ளது. எனவே, இல்லாத ராமர் பாலம் எனும் முட்டாள் தனத்தை முதலீட்டாக்கி இப்போது தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்றார் நல்லகண்ணு.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு

துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்டு வரும் கலைஞர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தக் காரரல்ல. ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் முதலமைச்சர். அத்தகையவருக்கு எதிராகக் கொலை வெறித் தூண்டுவதை அனுமதிக்க முடியாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பெரியார் பிறந்த பூமி என்று எச்சரிக்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பதாவது: தி.மு.கழகம் என்ற ஒரு கட்சிக்கு மட்டுமே கலைஞர் சொந்தமானவர் அல்லர்; ஆறரைக் கோடித் தமிழர்களுக்கும் இன்று அவர் முதலமைச்சர். 84 வயதிலும் ஒரு இளைஞரைப் போலத் தமிழகத்திற்காகவும், தமிழர்களுக்காகவும் சிந்தித்து உழைத்துக் கொண்டிருப்பவர். ஒரு பெரும் கொள்கை மரபு வழிக்குச் சொந்தக்காரர். பின் பற்றி வந்துள்ள கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர். அந்த வகையில் அவ்வப்போது துணிச்சலான கருத்துகளை வெளியிட்டு வருபவர். தமிழகம் தந்தை பெரியாரின் பூமி. இன்று தந்தை பெரியார் நம்முடன் இல்லை. ஆனால், அவரது பகுத்தறிவுக் கொள்கை களும், சுயமரியாதைச் சிந்தனைகளும் இன்றைக்கும் தமிழர்களை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. இங்கே மதத் தீவிரவாதிகளின் சலசலப்பு எடுபடாது என்பதை வேதாந்திகளும், அவருக்குப் பின்னால் மறைந்திருக்கும் மதவாதச் சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். மதவாத சக்திகள் மக்களை ஒருபுறம் திசை திருப்பிக் கொண்டிருக்கையில், தமிழர்களைப் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையிலிருந்தும், சிந்தனைகளிலிருந்தும் தடம்புரளச் செய்வதற்கான சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய செயலில் ஈடுபடும் சக்திகளையும் நம் இளைஞர்களுக்கு அடையாளம் காட்ட நாம் தவறிவிடக்கூடாது. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் தந்தை பெரியாரின் கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைத்திருப்ப வர்கள் இந்த ஆபத்தையும் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.

  • சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக் கோரி பந்த் : சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரி அக்டோபர் 1 ஆம் தேதி தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடத்துவது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள கடலில் காணப்படும் பாறைத் திட்டுக்கள் இராமரின் வானரசேனையால் கட்டப்பட்ட பாலம் என்றும் சேது சமுத்திரத் திட்டத்திற்காக இந்த அமைப்புக்களை இடிக்கக் கூடாது என்றும் கூறி இந்துத்துவ அமைப்புக்கள் இந்தியாவின் சில பகுதிகளில் போராடி வருகின்றன.
    இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது ராமர் குறித்து மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
    சர்ச்சைக்கு வித்திட்ட கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு, இராமரால் கட்டிய பாலம் என்று பக்தர்களால் நம்பப்படும் பாறைத்திட்டுக்களை உடைக்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.இதற்கு மூன்று மாத கால அவகாசத்தையும் மத்திய அரசு கோரியிருந்தது.
    இதன் காரணமாக சேது சமுத்திரத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேறுமா என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது.
    இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன.
    இம்முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காகவே முழு வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.
    இப் பிரச்சனையில் மத்திய அரசின் அணுகுமுறை தனக்கு பெரிய ஏமாற்றத்தையோ, திருப்தியையோ அளிக்கவில்லை என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி கூறினார்
  • 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றது :
    முதலாவது 20 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இன்று தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி இருபது ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் கவுதம் கம்பீர் சிறப்பாக ஆடி 54 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய உமர் குல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்
  • ராகுல் காந்திக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி : ராகுல் காந்திகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்திக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    படுகொலை செய்யப்பட்ட தனது தந்தை ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்ற அமேதி தொகுதில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி
  • மன்னிப்பு கேட்டார் ஜப்பானியப் பிரதமர் : பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஷின்சோ ஆபே, தாம் இம்மாதத்தின் முற்பகுதியில் எதிர்பாராத ஒரு தருணத்தில் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட குழப்பங்களுக்கான அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்
  • கால நிலை மாற்றம் குறித்து சர்வதேசத் தலைவர்கள் கவலை : பாதிக்கும் சீதோஷ்ணநிலை மாற்றத்தை கையாளும் விதம் பற்றி, உலக நாட்டுத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று, ஐநா மன்றத்தின் தலைமை செயலர் பான்கிமூன் அவர்கள் கூறியிருக்கிறார்
  • விடுதலைப் புலிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் கிளாலி இராணுவ முன்னரங்க பகுதியில் இன்று அதிகாலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களில் 20 விடுதலைப் புலிகளும், ஒரு இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • இன்றைய (செப்டம்பர் 24 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews


September 23, 2007

இன்றைய குறள்

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழி வழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்

அறத்துப்பால் : நடுவுநிலைமை

இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ்

"இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை"
- சுவாமி விவேகானந்தர்

கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும்

  • பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் : விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் சனிக்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் பேசும் போது, ராமரை இழித்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடைக்கு தங்கம் வழங்கப்படும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பதட்டம் அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமையன்று இந்துத்துவா சக்திகளைக் கடுமையாகக் கண்டித்து மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்து இருந்தார். ஞாயிற்றுகிழமை தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் பாரதிய ஜனதா அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தின் ஜன்னல்கள், கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு காவல்துறையினரே காரணம் என்றும், காவல்துறையினர் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் குமாரவேலு குற்றம்சாட்டியுள்ளார்
  • பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புங்கள் என்று இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள், விடுதலைப் புலிப் போராளிகளை அமைதிப் பேச்சுக்களுக்கு திரும்பும்படி கேட்டுள்ளார்
  • இலங்கையில் தொடரும் வன்முறை : இலங்கையின் வடக்கே சனிக்கிழமையன்றும், ஞாயிற்றுக்கிழமையன்றும் இடம்பெற்ற வெவ்வேறு வன்முறைகளில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
  • ஜப்பானின் புதிய பிரதமராகிறார் யசோ ஃபக்குடா : ஜப்பானின் மூத்த அரசியல்வாதியான யசோ ஃபக்குடா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கிறது : இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள், பாலஸ்தீன அதிபர் மஹமுது அப்பாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுமார் தொண்ணூறு பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • பர்மா ஆர்ப்பாட்டத்தில் பெரும் கூட்டம் : பர்மாவின் பிரதான நகரமான ரங்கூனில் அந்நாட்டின் இராணுவ அரசுக்கெதிராக இது வரை நடந்த ஆர்பாட்டங்களிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டமொன்றில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
  • இன்றைய (செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

September 22, 2007

"ஏழை எளியவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்"

- சுவாமி விவேகானந்தர்

  • 20:20 கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் :
    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக 20:20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதியடைந்துள்ளது http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • சேது திட்டம் மாற்றுப்பாதை சாத்தியமில்லை - மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு : சென்னையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு மாற்றுப் பாதை வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். மேலும் சேது சமுத்திர கால்வாய் திட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலுக்கு அடியே ஆடம்ஸ் பிரிட்ஜ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. இது இராமரின் வானரசேனையால் கட்டப்பட்ட அமைப்பு என்றும் சேது சமுத்திரத் திட்டத்துக்காக இதை இடிக்கக் கூடாது என்றும் கோரி சில இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன. இப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்து போது, மாற்று பாதை மூலமாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
  • முல்லைத்தீவில் தொடர்ந்து விமானத்தாக்குதல் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அரசின் விமானப்படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன
  • இரான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் - இரானிய அதிபர் : இரான் மீது தாக்குதல் நடத்த எண்ணும் நாடுகளுக்கு இரான் அதிபர் மஹமுது அஹெமதிநிஜாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெஹரானில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் பேசிய இரான் அதிபர், இரானின் இராணுவப் படைகள் தற்பாதுகாப்புக்காக மட்டுமே என்றாலும், தங்கள் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் நிச்சயம் வருத்தத்தை சந்திப்பார்கள் என்றும் கூறினார்
  • தாய்வானின் ஆளும் கட்சியின் தலைவர் இராஜினாமா : தாய்வானின் ஆளும் கட்சியின் தலைவரான யூ ஷி கூன் அவர்கள், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளார்
  • பர்மா போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஆங் சான் சூச்சி வாழ்த்து : பர்மாவின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மிகப்பெரிய போராட்டத்தில், வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூச்சி தோன்றியதன் மூலம் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 22 சனிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 20, 2007

'சோ' சொல்கிறார்...திமுக VS பாமக : இன்றைய இந்தியா மற்றும் தமிழகத்தின் நிலை

பின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 2

பின்னனிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா - 3

இன்றைய குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

பதிலுக்குப் பதில்

இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு 1920-ஆம் வருடம் பெர்னாட்ஷா ஒரு கடிதம் எழுதினார். அதில், "என் புதிய நாடகம் ஒன்றின் முதல் நாள் ஆட்டம் நடக்கிறது. அதற்கு இரண்டு டிக்கெட்டுகள் அனுப்புகிறேன். ஒன்று உங்களுக்கு. இன் னொன்று உங்கள் நண்பருக்கு, அப்படி ஒருவர் இருந்தால்" என்றிருந்தது. அதற்கு சர்ச்சில் கொஞ்சங்கூட தாமதிக்காமல், "உங்கள் புதிய நாடகத்தின் முதல் நாள் ஆட்டத்திற்கு நான் வர இயலாததற்கு வருந்துகிறேன். தயவு செய்து இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் அனுப்புங்கள், அப்படி ஒன்று நடக்குமேயானால்" என்று பதில் எழுதினார்.

  • ராமர் கட்டிய பாலம் குறித்து கருணாநிதி - அத்வானி வார்த்தைப் போர் : இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில், சேதுக் கால்வாய் தோண்டப்படும் கடலின் அடியில் இருக்கும் மணல் திட்டுக்கள், ராமர் கட்டிய பாலம் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். மு. கருணாநிதிஇதனை பாரதீய ஜனதாகட்சித் தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள் கண்டித்திருக்கிறார். இந்த மோதல்கள் தொடருகின்ற அதேவேளையில்,சேதுக்கால்வாய் தோண்டப்படும் கடற்பகுதியில் இருக்கும் மணல் திட்டுக்கள், ராமர் கட்டியபாலம் என்று வாதிட்டு வரும் இந்துத்துவ அமைப்புகள், இதனை பாதுகாப்பதற்காக ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழுவில் இருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் வேதாந்தம் அவர்கள் இது குறித்து ஒரு செவ்வியையும் வழங்கியுள்ளார்
  • இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 20 வருடங்கள் : இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும், அதனைத் தொடர்ந்த, இந்த இருபது வருட காலத்தில், இலங்கையின் இரு தரப்புக்களும் அரசியல் மற்றும் போர் ஆகியவற்றில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. அதேவேளை இலங்கை மக்களைப் பொறுத்த வரை, குறிப்பாக அங்கு வாழும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை, அங்கு இடம்பெற்ற தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக பல இழப்புகளையும், இடப்பெயர்வுகளையும் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதன் காரணமாக உருவான மாகாண சபைகள் மூலமான அதிகாரப் பரவலாக்கல் முயற்சிகள் ஆகியவை குறித்த இலங்கையின் பல தரப்பினரின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/indolankaagree.ram
  • பாகிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு : பாகிஸ்தானின் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படும் என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
  • கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கிகளுக்கு நிதி வழங்கியது சரியே' -பிரிட்டனின் மத்திய வங்கி ஆளுனர் : சர்வதேச கடன் நெருக்கடிகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் வங்கிகளுக்கு, 20 பில்லியன் டொலர்களை வழங்குவது என்ற தமது முடிவை, இங்கிலாந்தின் மத்திய வங்கியான, பாங்க் ஆஃப் இங்கிலண்டின் ஆளுனர், மேர்வின் கிங் அவர்கள் உறுதிப்படுத்தி வாதாடியுள்ளார்
  • இரானிய அதிகாரியைக் கைது செய்ததாக அமெரிக்கா அறிவிப்பு : இராக்கின் வடபுறத்தே, இரான் நாட்டின் புரட்சிப் படையின் விசேட பிரிவு அதிகாரி ஒருவரைத் தாம் தடுத்து வைத்துள்ளதாக, அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 20 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 19, 2007

இன்றைய குறள்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப்பார்த்தாலே போதுமானது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

"பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்"

- சுவாமி விவேகானந்தர்

  • தமிழகத்தில் ஆலய அர்ச்சகர்களாக அனைத்து சாதியினருக்கும் பயிற்சி : தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாகலாம் என்கிற புதிய ஏற்பாட்டின் கீழ், மாநிலத்தின் சைவ மற்றும் வைணவ ஆலயங்களில், மொத்தம் ஆறு இடங்களில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது
  • மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் சர்வதேச தரத்திதுக்கு பொருந்தவில்லை என்று வல்லுநர் குழு கூறியுள்ளது : இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசாங்க விசாரணைகள், சர்வதேச தரத்துக்குப் பொருந்தவில்லை என்றும், அதன் நடவடிக்கைகள் தோல்வியில் முடியும் போல் தென்படுவதாகவும், அவற்றைக் கண்காணிப்பததற்காக அமைக்கப்பட்ட சர்வதேசக் குழு கூறியுள்ளது
  • யாழ் குடாநாட்டில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் சட்டத்தரணிகளின், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி, அங்குள்ள சட்டத்தரணிகள் இரண்டாவது நாளாகப், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு சட்டத்தரணிகளைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு கப்பமாக பெருந்தொகைப் பணத்தைக் கோரி, அச்சுறுத்தல் விடுத்துள்ள அடையாளம் தெரியாதவர்களின் நடவடிக்கை காரணமாக நேற்று நண்பகல் முதல் இந்த பணிபுறக்கணிப்பு இடம்பெற்று வருவதாக யாழ் சட்டத்தரணிகள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
  • கம்போடியாவின் க்மெர் ரூஜ் இயக்கத்தின் மூத்த தலைவர் கைது :
    கம்போடியாவின் க்மெர் ரூஜ் இயக்கத்தின் உயிருடன் இருக்கும் மிக மூத்த உறுப்பினரான, நுவோன் சீயா, ஐ.நா மன்ற ஆதரவுடன் இயங்கும் விசாரணைக்குழு ஒன்றினால், போர்க்குற்றங்கள் மற்றும் மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
  • பர்மாவில் புத்த பிக்குமாரின் போராட்டம் தொடருகிறது : பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிரான, தமது மூன்றாவது நாள் தொடர் போராட்டத்துக்காக, செவ்வாடைகளையும், ஊதாநிறப் பட்டிகளையும் அணிந்த புத்த பிக்குமார், பர்மாவெங்கிலும் உள்ள நகரங்களில் ஊர்வலமாகச் சென்றனர்
  • துருக்கியில் பெண்கள் இஸ்லாமிய தலையங்கி அணிவதற்கு இருக்கும் தடை விலக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறுகிறார் : துருக்கிய பிரதமர் ரெசெப் டயிப் எர்துவான் , அரசாங்க பல்கலைக்கழகங்களில் , பெண்கள் இஸ்லாமிய தலையங்கி அணிவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை விலக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்
  • காசாப் பிரதேசத்தின் ஒரு பகுதியை எதிரிப் பிரதேசமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது : பாலத்தீனர்களின் காசா பிராந்தியத்தின் மீது புதிய பொருளாதார தடைகளைக் கொண்டுவர வழிசெய்யும் முகமாக, அந்தப் பிராந்தியத்தை ஒரு எதிரிகளின் பகுதியாக இஸ்ரேல் பிரகடனம் செய்துள்ளது
  • பிரிட்டனில் பல்வேறு இனக்குழுக்களிடையே வேறுபாடுகள் ஆழமாக உள்ளன என்று தகவல் : பிரிட்டனில் வாழும் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவும் வேறுபாடுகள் முன்பு எப்போதும் இருந்ததைவிட ஆழமாக இருப்பதாகவும் இவை, மத மற்றும் அரசியல் தீவிரவாதத்தைத் தூண்டுவதாகவும் பிரிட்டனில் வெளியாகி உள்ள ஒரு அறிக்கை கூறுகிறது

September 18, 2007

‘நான் முதல்வர் ஆக முடியாதா?’ - விஜய டி.ராஜேந்தர்

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. அணியில் இருந்த லட்சிய தி.மு.க.வின் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் வெளியேறி, தி.மு.க. அணிக்காக பிரசாரம் செய்தார். ‘சுங்குவார் சத்திரத்தில் சுக்குக் காப்பி விற்றாலும் விற்பானே தவிர, சுயமரியாதையை எப்போதும் இழக்கமாட்டான் இந்த ராஜேந்தர்’ என்று அந்த நேரத்தில் சொன்னார். இப்போது தி.மு.க. அணியில் தனது சுயமரியாதைக்கு, பங்கம் வந்திருப்பதாகச் சொல்லி கலைஞர் மீதும் தி.மு.க. மீதும் விமர்சனங்களைச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து முதலில் பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளில் இருந்த ராஜேந்தரைச் சந்தித்தோம். எப்படிப் பேசியிருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. பேட்டிக்குள் போகலாம்...
  • ஏன் இந்தத் திடீர் ஆவேசம்?
‘‘எனக்கென்னவோ இது ஆவேசத் தாக்குதல் மாதிரி தெரியவில்லை. ஆசுவாசமான தாக்குதல்தான். வழக்கமான மனநிலையுடன் இருந்துவரும் நான், என் மனதில் எழுந்த கேள்விகள் மற்றும் நெருக்கடிகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். உதாரணத்திற்கு, நான் சமீபத்தில் நாகர்கோயிலுக்குப் போயிருந்தேன். எங்கள் கட்சி நிர்வாகிகள் அப்போது என்னைச் சந்தித்தார்கள். ’கட்சிக்குப் பெயர் வைக்கும் முன்பாகவே சரத்குமாருக்கு வாழ்த்துச் சொல்கிறார் கலைஞர். அதுதான் அரசியல் நாகரிகம். என்றாலும் நம்மை ஒரு கட்சியாகவே அவர் மதிக்க மாட்டேன் என்கிறாரே?’ என்று கேட்டார்கள். நானும் இதுபற்றி யோசித்துப் பார்த்தேன். சரத்குமார் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக ஓட்டுக் கேட்டவர். நான் தி.மு.க.வுக்காக மாநிலம் முழுக்க பிரசாரம் செய்தவன். என்னுடைய வரவுக்காக தி.மு.க. தலைவர்கள் காத்திருந்து பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தி.மு.க.வுக்கு எதிராக வைகோ கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டபோது, அதற்குப் பதில் சொல்ல தி.மு.க.வில் ஆளே இல்லை என்ற நிலையில், இந்த டி.ஆர்.தான் அதை எதிர்கொண்டு சமாளித்தான். அவர்கள் இல்லை என்று மறுக்க முடியுமா? தேர்தல் முடிந்ததும் கலைஞர் எனக்கு போன் செய்து நன்றி சொன்னார்.ஆனால், கடந்த ஓராண்டாகவே எங்களை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை. ஆனாலும் என்னை பத்திரிகையாளர்கள் சந்தித்து இந்த ஆட்சி பற்றி கேள்வி கேட்கும்போதெல்லாம் நான் மென்மையாகவே பதில் சொல்லி வந்திருக்கிறேன். அப்படி இருந்தும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டமாக இருந்தாலும் சரி... அனைத்துக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் சரி... எங்களை மதித்து அழைப்பதே இல்லை. உள்ளாட்சித் தேர்தலின்போதும் எங்களை மதித்து இடங்களை அளிக்கவில்லை. ஆனாலும் பிரசாரம் செய்ய அழைத்தார்கள். நான் போகவில்லை. நான் தன்மானம் உள்ளவன். தேவை என்றால் பயன்படுத்திக்கொள்வது, பின்பு திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பதை எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்?கூட்டணியில் இருந்துகொண்டே இந்த ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் பா.ம.க.வை தாங்குதாங்கென்று தாங்குகிறார்கள். எங்கள் இயக்கம் என்றால் அவ்வளவு மட்டமா? ஆக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதிலேயே ஒரு குழப்பமான சூழ்நிலை. இந்த நிலையில்தான் என்னுடைய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.
  • ஜெயலலிதாவாவது எனக்கு உரிய மரியாதை தந்தார். ஆனால் கலைஞர் மதிக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறீர்களே...அப்படி என்ன நடந்துவிட்டது?
‘‘காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதி இடைத்தேர்தல்களின் போது கலைஞர் ஏழு கட்சிக் கூட்டணியுடன் பலமாக இருந்தார். அந்த நேரத்தில் என்னை அழைத்த புரட்சி செல்வி (ஜெயலலிதாதாங்க..), அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்யச் சொன்னார். சங்கராச்சாரியார்கள் கொலை வழக்கில் கைதான பின்பு, காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து யாருமே பேசத் தயங்கிய நேரத்தில் நான் போய்ப் பேசினேன். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்ததற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். அந்தம்மாவும் தனது நன்றியை வெளிப்படுத்தினார். பின்பு போட்டியிடும் இடங்கள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாட்டால் சுயமரியாதையோடு வெளியேறினேன்.ஆனால், தி.மு.க.வுக்காக நான் கடுமையான உழைப்பை வெளிக்காட்டியும் கூட என்னை, என் இயக்கத்தை அங்கீகரிக்க அவர்கள் தயங்குகிறார்கள்.. மறுக்கிறார்கள்... அதன் அடிப்படையில்தான் அந்தக் கருத்தைச் சொன்னேன்.
  • அதெல்லாம் சரி...உங்கள் கட்சிக்கு பத்து சதவிகித ஓட்டு இருப்பதாகச் சொல்கிறீர்களே.. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?
அப்படி இல்லையென்றால், நான் பேசினால்தான் கூட்டம் வரும் என்று சொல்லி அந்தம்மாவும், கலைஞரும் மாறி மாறி அழைத்தார்களே ஏன்? நான் மக்கள் கூட்டத்தை ஈர்ப்பவன் என்பதால்தானே? இது பொய் என்றால் ‘இல்லை.. ராஜேந்தர் சொல்வது தவறு’ என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். இன்றைக்கு டி.வி.ல கூட டி.ஆர். புரோகிராம் என்றால் டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறுதுல்ல... அட...ஒரு பத்திரிகையில் என் பேட்டி வருகிறது என்றால் அந்தப் பத்திரிகை பரபரப்பாக விற்கிறது. உங்களுக்கு எத்தனை எம்.பி. சீட் வேணும்னு இப்பவும் என்னைப் பார்த்துக் கேட்கும் நிலையில்தான் நான் இருக்கிறேன். எனக்கு எந்த ஆதரவும் இல்லையென்றால் எப்படி இப்படிக் கேட்பார்கள்? ‘என் நாக்கில் சரஸ்வதி இருக்கிறாள்’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்கிறார்... எங்கே போனாலும் என்னால் சரளமாகப் பேச முடியும். என் திறமை வெளிப்படுகிறது... மக்களிடம் எனக்கு இன்னமும் செல்வாக்கும் நம்பகத்தன்மையும் இருக்கிறது. நடுநிலை வாக்காளர்களை என் பக்கம் திருப்பும் சக்தி எனக்கு உண்டு. 30 சதவிகித வாக்குகளை இப்படி என்னால் திருப்ப முடியும். இந்த நிலையில் எப்படிச் சொல்ல முடியும் எனக்கு செல்வாக்கு இல்லையென்று?’’
  • பத்து சதவிகித வாக்குகள் இருக்கிறது’ என்று விஜயகாந்த் சொன்னால் நம்பலாம். அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால் நீங்கள் சொல்வதை இன்னமும் நம்ப முடியவில்லையே...?
என்ன... அவர் பத்து சதவிகிதம் வச்சிருக்கார்.. பத்து சதவிகிதம் வச்சிருக்கார் என்றே சொல்கிறீர்கள்? அவர் எப்போது அரசியலுக்கு வந்தார்? ஒண்ணு தெரிஞ்சுக்கங்க.. இவனும் வேணாம்.. அவனும் வேணாம்.. என்று சொல்லி குப்பைலகூட தங்களோட ஓட்டைப் போடும் நடுநிலையாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அந்த ஓட்டிலிருந்துதான் நான் பர்கூரில் நாற்பதாயிரம் ஓட்டு வாங்கினேன். ‘ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பது மாதிரி, ஆளே இல்லாத நேரத்தில்தான் விஜயகாந்தின் இந்த ஆட்டமெல்லாம். நான் இதோ முழு வீச்சில் களத்தில் இறங்கப் போகிறேன் . இப்போ வாங்க பார்ப்போம்.. இதுவரை என் செல்வாக்கை தி.மு.க. வெற்றிக்கு நான் பயன்படுத்தினேன்..அ.தி.மு.க. வெற்றிக்குப் பயன்படுத்தினேன்.. இப்போ நான் சொல்றேன்.. தி.மு.க.வும் இல்ல.. அ.தி.மு.க.வும் இல்ல.. நடுநிலையாளர்களின் ஓட்டைப் பிரிக்க நான் வருகிறேன். இப்போ சந்திப்போம் வாங்க.. இதான் சவால்..இதான் போட்டி.ஆக, அவர் வாங்கிய பத்து சதவிகித ஓட்டு அவருக்கு விழுந்தது இல்லை. சரி அப்படியே விழுந்ததுன்னு சொன்னா எங்கே அவர் படத்துக்கு இப்போ கலெக்ஷன் காட்டச் சொல்லுங்க பார்க்கலாம்..? சபரி படத்தோட நிலை என்ன? அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரின் நிலை என்ன?234 தொகுதிகளில் போட்டியிட்டு பல கோடி செலவு செய்து, ஒரே ஒரு தொகுதியில் ஜெயிப்பது சாதனை அல்ல. இவர் அடுத்த முதல்வர் ஆவேன் என்கிறாரே ஏன் ஒரு இடம்தான் ஜெயிக்க முடிந்தது? நான் முதல்வர் ஆவேன்னு சொல்லலை. என் இலக்கு நடுநிலையான அந்த முப்பது சதவிகித வாக்குகளை என் பக்கம் திருப்ப வேண்டும் என்பதுதான். அது ஒரு பிராசஸ். பொருத்திருந்து பாருங்க.
  • உங்களின் இந்தத் திடீர் விமர்சனத்திற்குப் பின்னால் மாறன் சகோதரர்கள் இருக்கிறார்கள் என்றொரு விமர்சனம் இருக்கிறதே..?
யாருடைய ஹேஷ்யம், ஜோதிடம் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. நான் இந்தப் பேட்டி கொடுத்த அடுத்த நாளே சுனாமி வருதுன்னா பாருங்க.. யாராவது எதிர்பார்த்தார்களா? நான் சன் டி.வி.ல புரோகிராம் பண்றேன். Êசக்சஸ்புல்லா போகுது. கலைஞர் டி.வி.லயும் என்னைக் கூப்பிட்டார்கள். நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இன்றைக்கு இந்த ராஜேந்தரால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று கலைஞரைச் சொல்லச் சொல்லுங்கள்..அப்புறம் பாருங்கள் எனக்கு எந்தெந்த கதவுகள் திறக்கிறது என்று. எனக்குக் கொடுத்த சீட்டை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன்மானத்தோடு வெளியே வந்தவன் இந்த டி.ஆர்.! அப்படிப்பட்ட நான் யாருடைய பேச்சையும் எந்தச் சூழ்நிலையிலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. இறைவனுக்கும் என் தொண்டனுக்கும் மட்டும்தான் நான் அடிபணிவேன்.
  • சரி..லட்சிய தி.மு.க.வின் லட்சியம்தான் என்ன?
எல்லா கட்சியும் இன்று ஜாதி, மத அடிப்படையில் செயல்படுகின்றன. நான் மட்டும்தான் என் கட்சியை ஜாதி, மதங்களைக் கடந்து மதநல்லிணக்க இயக்கமாக நடத்துகிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகளை என்னைத் தவிர வேறு யாரால் வாங்க முடியும் சொல்லுங்க.. அந்த அளவுக்குத் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு எந்த நடிகனாவது இந்த விஷயத்தில் என்னோடு போட்டி போட்டு வரமுடியுமா சொல்லுங்க.? நான் ஜாதி அரசியல் பண்ணலை. ஆந்திராவில் இருந்து எனக்குப் பணம் வரலை. கட்சிப் பதவியை பணத்துக்காக விற்கலை. அடிமட்டத் தொண்டனை மதிக்கிறவனா இருக்கிறேன்.ஊழலை எதிர்க்கிறேன்னு சொல்றாரே விஜயகாந்த்.. அவர்கூட இருக்கிற கு.ப.கி. யாரு? பொன்னுசாமி யாரு? அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்களா? தூய்மையை தொட்டில் கட்டி ஆட்டியவர்களா? வாய்மையை வாய்க்கால் வெட்டிக் காத்தவர்களா? சுத்தமான கரத்துக்குச் சொந்தக்காரர்களா? இவர்களை வைத்து எப்படி இவர் ஊழலை ஒழிப்பார்? என்கிட்ட இதுவரை எந்த முன்னாள் மந்திரியும் வரலை. காரணம், என்னோட ‘மிஸ்டர் கிளீன் இமேஜ்’. விஜயகாந்தை ஊடகங்கள்தான் பெரிதாகக் காட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை காலம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் முன்னுக்குக் கொண்டு வந்து வைக்கும். ‘வல்லவன்’ படத்தில் ஒரு டயலாக் உண்டு. யார் முன்னாடி போறதுங்றது முக்கியம் இல்ல. ‘யார் முந்தியடித்து முதலாவதா வராங்கங்றதுதான் முக்கியம்’. எனக்கு இப்போ எந்தக்கட்டுப்பாடும் இல்ல. இளைஞர்கள் முழுமையா என் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இவர்களை வைத்து எதிர்கால தமிழகத்தை உருவாக்கும் சக்தியா எங்கள் இயக்கத்தை ஆக்குவதுதான் லட்சியம்.’’
  • ‘நான் முதல்வர் ஆக முடியாதா?’ன்னு கேட்டிருக்கிறீர்கள். ஏன் இப்படி?
நான் அப்படிச் சொல்லவில்லை. ‘நீங்கள் முதல்வர் ஆக முடியுமா’ என்று கேட்டார்கள். ‘நான் ஆக முடியாதுன்னு நீங்க சொல்ல முடியுமா’ன்னு கேட்டேன். நான் கேக்குறேன்.. அடுத்தவர் எழுதிக் கொடுப்பதைப் பேசி, அறிக்கையாக வெளியிடும் தலைவர்கள் இருக்கும்போது, சொந்தமாக நல்ல தமிழைப் பேசும் நான்.. எம்.ஜி.ஆரை எதிர்த்து எதிர்நீச்சல் போட்ட நான், கலைஞருடன் சமகாலத்தில் அவருக்குக்கை கொடுத்த நான், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு சரிக்குச் சரி நின்ற நான்... ஏன் ஒரு தலைவனாக வரமுடியாது?தவிர நான் ஒரு தமிழன். விஜயகாந்துக்கு ‘திராவிட’ன்னுதான் போஸ்டர்அடிப்பாங்க. அதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு ‘தமிழன்’னு அடிப்பாங்க. ஆக ஒரு திராவிடனே தமிழ்நாட்டைப் பிடிக்க நினைக்கும்போது ஒரு தமிழன் நான் ஏன் நினைக்கக் கூடாது? இதுதான் சார் இப்போ போட்டியே.’’
  • நீங்கள் முன்பு தனிக்கட்சி நடத்தியபோதும் ‘எனக்குத் தலைவர் கலைஞர்தான்’ என்று சொல்லி இருந்தீர்கள். இப்போதும் உங்கள் தலைவர் கலைஞர்தானா?
‘‘அது அப்போ சொன்னேன். அதனாலதான் தலைவருக்கு ஒரு இக்கட்டு என்று சொன்னபோது என் கட்சியை தி.மு.க.வுடன் இணைத்து தேர்தலின்போது உதவினேன். ஆனால் லட்சிய தி.மு.க.வை நான் தொடங்கிய பின்பு ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டேன். இனிமே யாரையும் தலைவன்னு சொல்றதில்ல. சார், முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டி போடட்டும். ஆனா தமிழ்நாட்டில், தமிழினத்தின் தலைவனாக நான் வருவேன். அதற்கான அனுபவமும் தகுதியும் நம்பகத்தன்மையும் எனக்கு உண்டு. தமிழ்க் குலத்தின் பிரதிநிதியாக, தாய்க்குலத்தின் அங்கீகாரம் பெற்றவனாக, இளைஞர்களுக்கு தன்னம்பிகை ஊட்டுபவனாக இருந்து அந்த இடத்தை நான் அடைந்தே தீருவேன்.’’
  • உங்களின் இதுமாதிரியான கருத்துக்களைப் பார்த்து சிலர் கிண்டலடிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
‘‘அந்த மாதிரி ஆட்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ‘கடவுளே இல்லை’ என்று சொல்லும் உலகம் இது. காந்தியை சுட்டுக்கொன்றவர்களுக்காக மேடை போட்டுப் பேசும் உலகம் இது. என்னுடைய திட்டங்கள் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். நான் என்ன கடவுளா, எல்லோரும் ஏற்றுக்கொள்ள? எம்.ஜி.ஆர். ‘அண்ணாயிசம்’ என்று சொன்னபோது ‘அண்ணாயிசமா, பாயசமா’ என்று கிண்டலடித்தவர்கள் பின்பு என்ன ஆனார்கள்? எந்த சாதனையாளனை உலகம் எடுத்த எடுப்பில் அங்கீகரித்திருக்கிறது? கடற்கரையில் சுண்டல் விற்பவனைக்கூட கிண்டல் செய்வார்கள். ஆனால் அவன் வீட்டிற்குக் காசு கொண்டு போவான். கிண்டல் பண்றவன் என்ன கொண்டுபோவான்? அதனால் இதுமாதிரி கிண்டல்களை நான் பொருட்படுத்த மாட்டேன்.’’
  • இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று சொல்லுங்களேன்?
‘‘எங்கள் கட்சி பொதுக்குழு கூடப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள். என் வேகமும் குறையாது. விவேகமும் மறையாது. நான் சரித்திரம் படைக்கக் காத்திருக்கும் சத்ரியன் மட்டும் அல்ல.. சாணக்யன்!’’ என்று தனது ஸ்டைலிலேயே சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார் விஜய டி.ராஜேந்தர்.

இன்றைய குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல, அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

"இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக்காகக் காத்திருக்கிறது என்பேன்"

- சுவாமி விவேகானந்தர்